திங்கள், 16 பிப்ரவரி, 2015

தமது பாக்கெட்டை நிரப்பிக்கொள்ளவே ராஜபக்ச குடும்பம் செயற்பட்டது காலியில் பிரதமர் தெரிவிப்பு..!!!

கடற்கரைகளுக்கு அருகாமையில் வானுயர்ந்த ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிக்க இனிமேல் அனுமதி வழங்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
காலி பிரதேசத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த பிரதமர் காலி மாவட்ட ஐ. தே. க. ஆதரவாளர்களைச் சந்தித்தார்.

இந்த சந்திப்பு காலி ஐ. தே. க. பிரதான காரியாலயத்தில் நடைபெற்றது.

தென்பகுதி சுற்றுலா வளர்ச்சி குறித்தும் புதிய அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் பிரதமர் இங்கு கருத்துத் தெரிவித்ததார்.

அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் 3 பிரதான திட்டங்கள் உள்ளன.


மக்களுக்கு நிவாரணம் வழங்குதல்,
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்துதல்,
கடந்த கால மோசடிகள் குறித்து ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குதல் என்பனவே அவையாகும்.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஏனைய கட்சிகளுடன் பேசி வருகிறோம்.

சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்து பாரிய சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் கம்பனிகளுடன் பேசி பயனில்லை.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தி மக்களின் வருமானத்தை அதிகரிப்பது குறித்து சிந்திக்காமல் தமது பாக்கெட்டை நிரப்பிக்கொள்ளவே ராஜபக்ச குடும்பம் செயற்பட்டது.

தெற்கிலுள்ள கடற்கரைகளை பாதுகாக்க வேண்டும். புதிய சுற்றுலா ஹோட்டல்கள் அமைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.

அழகான பல கடற்கரைகள் நாசமடைந்துள்ளன. அவற்றை பாதுகாக்க வேண்டும். என்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக