
இது தொடர்பில் உறவினர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பூநகரியை சேர்ந்த க.பொ.த உயர்தர வகுப்பு மாணவி யாழ்.அரியாலை பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து படித்துள்ளார்.
இந்நிலையில் தன்னை யார் என்றே தெரியாத சில நபர்கள் பின்தொடர்வதாக, நேற்றைய தினம் தனது பெற்றோருக்கு தொலைபேசியில் முறைப்பாடு செய்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.நகரில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு காலை 9 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள விக்டோரியா வீதியில் வைத்து வாகனத்தில் வந்த சிலர், குறித்த மாணவியை கடத்திச் சென்றுள்ளதாக உறவினர்கள் இன்றைய தினம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியை வாகனத்தில் வந்த சிலர் பிடித்து இழுத்து ஏற்றியதை தாங்கள் பார்த்ததாக அந்த வீதியால் சென்ற சிலர் தமக்கு கூறியதாகவும் உறவினர்கள் மேலும் கூறியுள்ளனர்.
இதேபோன்று குறித்த கடத்தல் சம்பவம் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என உறவினர்கள்; பொலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக