சனி, 7 பிப்ரவரி, 2015

சரத் பொன்சேகாவுக்கு ஆசை காட்டி மோசம் செய்த ஜெயந்த கெட்டகொட..!!!!

குடியியல் உரிமைகள் மீண்டும் வழங்கப்பட்டமையை அடுத்து இன்று நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பதவியேற்கவிருந்தபோதும் அது நடைபெறவில்லை.
ஜனநாயக கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஜெயந்த கெட்டகொட பதவி விலகி, இடம்தராமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியியல் உரிமைகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளமையால் சரத் பொன்சேகா, மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க முடியும் என்று சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்திருந்தார்.


இந்தநிலையில் கெட்டகொட பதவி விலகினால் மாத்திரமே சரத் பொன்சேகாவினால் பதவியேற்க முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, சரத் பொன்சேகா. புதவியேற்க வேண்டுமானால் கெட்டகொட பதவிவிலக வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்திருந்தார்.

ஏற்கனவே கெட்டகொட, ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக