செவ்வாய், 17 பிப்ரவரி, 2015

மஹிந்த ராஜபக்ச ஓர் தேசிய வீரர் பந்துல குணவர்தன..!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஓர் தேசிய வீரர் என முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
பொரளையில்   நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் சில தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நுகேகொடையில் 18ம் திகதியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன்.

மஹிந்த ராஜபக்சவை ஆட்சி பீடமேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்கின்றேன்.


கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என கட்சி அறிவித்துள்ளது. இவ்வாறான ஓர் நிலையில் கூட்டத்தில் பங்கேற்பது கட்சியின் ஒழுக்க விதிகளுக்கு புறம்பானது.

கட்சியின் தீர்மானத்திற்கு புறம்பாக செயற்பட விரும்பவில்லை. எனினும் கூட்டத்தில் பங்கேற்கவே தனிப்பட்ட ரீதியில் விரும்புகின்றேன் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக