
இந்திய சஞ்சிகையான புரோன்ட்லைனின் 30வது வருடப்பூர்த்தி சஞ்சிகையை இலங்கையில் விநியோகிக்க அனுமதித்தமைக்கு எதிராகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை விடுத்துள்ளதாக மாதில்ல பன்னாலோக்க தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சஞ்சிகை முன்னாள் அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படாமல் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.
இதில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 1987 ஆம் ஆண்டு வழங்கிய செவ்வி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், வெளிநாட்டவர்களை வடக்குக்கு அனுமதித்தமை மற்றும் வடக்கில் காணிகளை படையினரிடமிருந்து விடுவிக்கின்றமை போன்ற நடவடிக்கைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயங்கள் என்று பன்னாலோக்க தேரர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக