சனி, 21 பிப்ரவரி, 2015

இராஜதந்திர கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது...!!!

இராஜதந்திர கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ராஜதந்திர கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத்தி சிலர் இவ்வாறு போதைப் பொருள் கடத்தியுள்ளனர்.

இது தொடர்பிலான தகவல்கள் கிடைத்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் கீழ் இவ்வாறு இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக