வெள்ளி, 20 பிப்ரவரி, 2015

வவுனியாவில் சாரணர் தந்தை பேடன் பவல் பிரபுவின் 158வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்!!

சாரணர் தந்தை பேடன் பவல் பிரபுவின் 158வது பிறந்த தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும் திரி சாரணர் குழுவும் இணைந்து 08வது மாபெரும் இரத்ததான முகாமை நடாத்துவதற்கு ஒழுங்குகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் தலைவர் திரு.சு.காண்டீபன் தெரிவித்தார்.

காலம் - 22/02/2015 (ஞாயிறு )
நேரம் - காலை 08.30 மணி முதல் மதியம் 12.00 மணிவரை
இடம் - வ/வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், கண்டி வீதி, வவுனியா.

இவ் இரத்ததான நிகழ்விற்கு சுபாஸ் அச்சகம் பூரண அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இரத்ததான நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பும் குருதிக்கொடையாளிகள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தங்களின் வரவை உறுதிப்படுத்தலாம்.
தொடர்புகளுக்கு - 0766644059, 0718809757, 0770733719


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக