
சுமார் 400 கோடி அமெரிக்க டொலர்கள் இவ்வாறு கடனாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
கடன் பெற்றுக் கொள்வது தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டினா லாகார்ட்டிற்கும் இடையில் வாசிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களுக்கான தவணைப்பணம் மற்றும் வட்டி ஆகியனவற்றை செலுத்துவதனால் அந்நிய செலாவணி ஒதுக்கம் வீழ்ச்சியடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்நிய செலாவணி ஒதுக்கத்தை ஸ்திரத்தப்படுத்திக் கொள்ள இந்தக் கடன் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
இதேவேளை இலங்கையின் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பொறுப்பாளர் டொட் ஸ்னைடர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 23ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
இவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 4ம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக