செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

நீதி அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவை சிறையில் சென்று பார்வையிட்டார்..!!

புதிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை இன்று நேரில் பார்வையிட்டுள்ளார்.
போலியான ஆவணங்களை தயாரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்ற விசாரணைப் பிரிவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்க வெலிக்கடைச் சிறைச்சாலையில் விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள திஸ்ஸ அத்தநாயக்கவின் சுகநலன்களை பார்வையிடும் நோக்கில் விஜயதாச ராஜபக்ஸ இன்று வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.


வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலையில் அத்தநாயக்கவை, நீதி அமைச்சர் சந்தித்துள்ளார்.

அத்தநாயக்கவை சந்தித்து சிறைச்சாலையை விட்டு வெளியேறிய போது அத்தநாயக்கவின் மகளையும் சந்தித்து நீதி அமைச்சர் பேசியுள்ளார்.

இதேவேளை, திஸ்ஸ அத்தநாயக்கவை இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நேரில பார்வையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக