வியாழன், 12 பிப்ரவரி, 2015

விடுமுறை அனுமதியை பெற்று டுபாய் சென்ற சகோதரர் திரும்பி வருவார் நாமல் ராஜபக்ச..!!!

தனது சகோதரரான யோஷித ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்றும் யோஷித ராஜபக்சவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையில் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித ராஜபக்ச, டுபாய்க்கு பயணமாகியுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சாதாரண பயணிகள் பயன்படுத்தும் வழியூடாக நேற்று முன்தினம் செவ்வாயக்கிழமை இரவு எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ரி.கே 653 என்ற விமானத்திலேயே அவர் டுபாய் பயணமாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பில் கருத்து தெரிவித்த யோஷித ராஜபக்சவின் மூத்த சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, தனது சகோதரர் நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கை திரும்புவார் என்றும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு அமைச்சில் சாதாரண பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பெற்றுக்கொள்ளக்கூடிய விடுமுறை அனுமதியினைப் பெற்றுக்கொண்டே தனது சகோதரர் தனிப்பட்ட காரணத்துக்காக டுபாய் சென்றார் என்றும் நாமல் எம்.பி மேலும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக