ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளேன் சஜித் பிரேமதாச..!!

நுறுநாள் வேலைத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று செவ்சிறிபாயவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எனது எந்த ஒரு ஒப்பந்தமும் ஒளிவு மறைவுமின்றி விளம்பரப்படுத்தப்படும்.

எனது அமைச்சின் கீழ் உள்ள அதிகார சபைகள், நிறுவனங்களில் ஒருபோதும் எனது கட்சிக்காரர், சொந்தக்காரர் மற்றும் தோ்தலில் உதவி செய்தவர்களை பணிப்பாளர் சபையில் நியமிக்கப் போவதில்லை.


ஒவ்வொரு துறையிலும் சிறந்த நிபுணத்துவம் பெற்றவர்களையே தேடுகின்றேன்.

எனது அமைச்சினை நடைபெற்றுள்ள லஞ்சம், நிதி மோசடிகளை சர்வதேச கணக்காய்வாளர் கம்பனி ஆய்வு செய்து வருகின்றது.

அதன் பின் இந்த அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களில் ஊழல், நிதி மோசடி, அதற்கு உடந்தையானவா்கள் வெளியில் அனுப்பப்படுவார்கள் என அமைச்சர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக