வியாழன், 22 ஜனவரி, 2015

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இன்று ஜனாதிபதியை சந்திக்கின்றனர்..!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை நேற்று  சந்தித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இன்று  மாலை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று கிழக்கு மாகாணசபை ஒத்திவைக்கப்பட்டவுடனே உடனடியாக தலைமையின் அழைப்பின் பேரில் கொழும்பு சென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இன்று த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதியைச் சந்திக்க விருப்பதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் இத்தகவலை தெரிவித்தார்.


கிழக்கு மாகாணசபை ஆட்சி அதிகாரம் அமைப்பது தொடர்பாக அண்மைக்காலமாக பல கட்சிகள் பலசுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தி எந்த முடிவும் எட்டப்படாமல் கலைந்து சென்றார்கள். ஆனால் இன்று இதற்கான இறுதி முடிவெடுப்பதற்கே ஜனாதிபதி மைத்திரிபால இவர்களை சந்திக்கவிருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முதற்கட்டமாக த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் ஜனாதிபதி, மாலை அனைத்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் சந்திக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

த.தே.கூட்டமைப்பு தலைமையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமையும் கி.மா.சபை ஆட்சி அமைப்பது தொடர்பாக பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியும் இதுவரைக்கும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பதுடன் முதலமைச்சர் யார் என்ற வினாவிற்கும் பதில் காணமுடியாமல் இருக்கின்றது.

இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதியின் சந்திப்பின் பின்னர் கி.மா.சபை அமைப்பது தொடர்பாகவும் முதலமைச்சர் யார் என்ற வினாவிற்கான விடையையும் அறிய முடியும் எனவும் அந்த முக்கியஸ்த்தர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக