வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரிச் சமூகத்தின் அனுசரணையில் மன்னார் பெரியமடு மகா வித்தியாலய ஆசிரியர் திருவாளர் ஜெயச்சந்திரன் அபிராம்(கலாரசிகன்) எழுதிய "கருப்பு வெள்ளை படம்" எனும் கவிதை நூல் இன்று(24/01/2015) மாலை 3.00 மணிக்கு ஆசிரியர் திருமதி கங்கைவேணி தலைமையில் கோவில்குளம் இந்துக் கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு கே.சிவஞானம், சிறப்பு அதிதிகளாக எழுத்தாளர் திரு கே.கே.அருந்தவராஜா, வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு ந.பார்த்தீபன், தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), வவுனியா வடக்கு கல்வி வலய ஆசிரியர் வள நிலைய முகாமையாளர் திரு ஜெயச்சந்திரன், மன்னார் பெரியமடு மகா வித்தியாலய அதிபர் திரு து.குலதீபன், கலைஞர்கள், நண்பர்கள், கோவில்குளம் இளைஞர் கழக உறுப்பினர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து வெளியீட்டினை சிறப்பித்தார்கள்.
இவ் நிகழ்வுக்கான ஆசியுரையினை எழுத்தாளர் திரு கே.கே.அருந்தவராஜா அவர்களும், வெளியீட்டு உரையினை வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு ந.பார்த்தீபன் அவர்களும், நூல் அறிமுகத்தினை கவிதாஜினி சுகந்தினி அவர்களும் நிகழ்த்தியதுடன், முதல் பிரதியினை இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு கே.சிவஞானம் அவர்களிடமிருந்து தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) பெற்றுக்கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக