சனி, 24 ஜனவரி, 2015

40 அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டு..!!!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் 40 அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதனைத் தொடர்ந்து 40 அரசியல்வாதிகள் தொடர்பில் லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக குறித்த காலத்தில் 80 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் கனேஸ் தர்மவர்தன தெரிவித்துள்ளார்.

முறைப்பாடுகள் அனைத்தும் தனித்தனியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளது.


சில தரப்பினர் போதிய ஆதாரங்கள் இன்றி முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறான முறைப்பாடுகளை விசாரணை செய்ய தேவையற்ற கால நேர விரயம் ஏற்படும்.

லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவிற்கு போலியான அடிப்படையில் முறைப்பாடு செய்யும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடமுண்டு.

போதியளவு ஆதாரங்களுடன் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும் என தர்மவர்தன கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக