வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் இருவர் பாடசாலைக்கு முன்பாக உள்ள வீதியில் இருந்து வரும் போது A9 பிராதான வீதியால் வந்த பேரூந்துடன் மோதி மாணவர்கள் காயமடைந்து, வவுனியா பொது வைத்தியசாலைக்கு தற்போது கொண்டு செல்லப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
2016 உயர்தர வர்த்தக பிரிவைச்சேர்ந்த சுலக்சன், கிரிசாந்தன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், சுலக்சன் தீவீர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது வைத்தியசாலை செய்தியாளர் தெரிவித்தார்.
பாடசாலையில் விளையாட்டு போட்டிகள் நடந்துவரும் இக் காலப்பகுதியில் இவ் விபத்து நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக