முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸை உடனடியாக பதவி விலகுமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
வண.மாதுலுவாவே சோபித தேரர், தலைமையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகள் வெளியான போது அவர், ஜனாதிபதி செயலகத்தில் மகிந்த ராஜபக்சவுடன் இருந்தார் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.
இதனால் அவர் தொடர்பில் தமக்கு நம்பிக்கையில்லை என்றும் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸுக்கு எதிராக உயர்நீதிமன்றுக்கு முன்பாக சட்டத்தரணிகளால் பல தடவைகள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக