புதன், 21 ஜனவரி, 2015

விமல் வீரவன்சவே மஹிந்த ராஜபக்சவை அழிக்கிறார் ரணில்..!!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அழித்துக்கொண்டிருக்கிறார் என்று பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
புதிய தேசிய அரசாங்கத்தின் முதலாவது நாடாமன்ற அமர்வு நேற்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, வெறுப்பு மற்றும் இனவாதம் என்பவற்றை வீரவன்ச தொடர்ந்தும் மேற்கொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

அனைவரும் இணைந்து நாடாளுமன்ற அதிகாரத்தை வலுப்படுத்தவேண்டும். எனினும் இந்த நிர்வாகம் முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதியினால் உதாசீனம் செய்யப்பட்டது என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வுக்காக 13வது அரசியலமைப்பை
நடைமுறைப்படுத்துவதுடன் சுயாதீன ஆணைக்குழுக்களையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக ரணில் குறிப்பிட்டார்.

இதன்போது உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்துக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்தார்
ஜே வி பி தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த ஆதரவு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக