சனி, 17 ஜனவரி, 2015

சரத் பொன்சேகாவிற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது..!!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிரான வழக்குகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அராசங்கம் சரத் பொன்சேகாவிற்கு எதிராக பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்குகளை புதிய அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது.

சரத் பொன்சேகாவிற்கு பீல்ட் மார்ஸல் பதவியை வழங்கவும், இராணுவப் பட்டங்கள் பதக்கங்களை மீள வழங்கவும் இந்த வழக்குகள் தடையாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வழக்குகள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டால் இராணுவத்தினர்
பட்டங்களையும் பதவிகளையும் வழங்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

சரத் பொன்சேகாவிற்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பும் வழங்கப்பட உள்ளது.

சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்பட்டு பின்னர் சுவீகரிக்கப்பட்ட நாரஹென்பிட்டி காணியை மீள வழங்கவும் அரசாங்கம் இணங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக