சனி, 24 ஜனவரி, 2015

அரசியல்வாதிகளின் கறுப்புப் பணம் தொடர்பில் விசாரணை நடாத்த புதிய அரசாங்கம் தீர்மானம்..!!!

அரசியல்வாதிகளின் கறுப்புப் பணம் தொடர்பில் விசாரணை நடாத்த புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமான வர்த்தகர்கள் வைப்புச் செய்த கறுப்புப் பணம் தொடர்பில் விசாரணை நடாத்த சுவிட்சர்லாந்து வங்கிகளிடம் உதவி கோரப்பட உள்ளது.

சுமார் 89 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணம் இவ்வாறு இரகசியமாக சுவிட்சர்லாந்து வங்கிகளில் பேணப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கறுப்புப் பணம் பற்றிய இரகசியங்களை அம்பலப்படுத்துவது குறித்த சட்டங்களில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் திருத்தம் கொண்டு வந்துள்ளது.


இந்த சட்டத் திருத்தங்களுக்கு அமைவாக இலங்கை, சுவிட்சர்லாந்தின் உதவியை நாடவுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தவர்கள் இரகசிய கணக்குகளை பேணினார்களா அல்லது சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டார்களா என்பது பற்றிய தகவல்களை வழங்குமாறு இந்தியாவிடமும், சர்வதேச நாணய நிதியத்திடமும் புதிய அரசாங்கம் ஏற்கனவே கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக