திங்கள், 15 டிசம்பர், 2014

சிட்னி நிலவரம் இருவர் பலி! மூவர் படுகாயம்..!!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ஹொட்டலொன்றில், தடுத்து வைக்கப்பட்டிருந்த  பணயக் கைதிகளை மீட்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், தீவிரவாதி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் ஆபத்ததான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியதுடன், பொலிஸார் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.



இந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக