செவ்வாய், 16 டிசம்பர், 2014

சட்டவிரோத பிரச்சாரங்கள் பொலிஸாருக்கு தென்படாவிட்டால் அவற்றை காட்டத் தயார் தேர்தல் ஆணையாளர்..!!

சட்டவிரோத பிரச்சாரங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தென்படாவிட்டால் அவற்றை காண்பிக்கத் தயார் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் கட்அவுட்கள், பதாகைகள் சட்டவிரோதமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான கட்அவுட்கள்,  பதாகைகள் பொலிஸாரின் கண்களுக்கு தென்படாவிட்டால் அவற்றை தேர்தல் திணைக்களம் காட்டித் தரும்.


எதிர்வரும் 18ம் திகதியின் பின்னர் சட்டவிரோத பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் பற்றி தேர்தல் திணைக்களம் பொலிஸாருக்கு அறிவிக்கும்.

இந்த விடயம் தொடர்பில் கண்காணிப்பதற்கு தேர்தல் திணைக்களம் சில அதிகாரிகளை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர் என்ற ரீதியில் அனைத்து வேட்பாளர்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்க சகல வழிகளிலும் நடவடிக்கை எடுப்பேன் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக