(ஆதி) வவுனியா தோணிக்கல் சிவாலய முன்பள்ளியில் பெற்றோர் தின விழா இன்று(03/11) புதன்கிழமை காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதவும் கோயில்குளம் இளைஞர் கழக இஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும்
கௌரவ விருந்தினராக தெற்கு தமிழ் பிரதேச சபை உப தலைவர் திரு.ரவி அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திடீர் மரண விசாரணை அதிகாரி திரு.சுரேந்திரசேகரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், குடும்ப நல உத்தியோகத்தர், கூட்டுறவு காப்புறுதி உத்தியோகத்தர்கள், சித்தாலேப்ப நிறுவன உத்தியோகத்தர்கள், முத்து மாரி அம்மன் ஆலய தலைவர் திரு.தியாகராஜா மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.ரவிதரன், சமூக ஆர்வலர் திரு.மகேந்திரராஜா, புளொட் முக்கியஸ்தர் திரு.கண்ணதாசன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் கோயில்குளம் இளைஞர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 45 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கோயில்குளம் இளைஞர் கழகத்தின் அனுசரணையில் வழங்கி வைக்கப்பட்டன. இதனை வவுனியா நகரசபை முன்னாள் உப நகரபிதவும் கோயில்குளம் இளைஞர் கழக இஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உரையாற்றிய திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள், யுத்தாதால் மிகவும் ஒரு பாரதூரமான அழிவை சந்தித்ததன் பின்னர் எமது இனத்தின் எதிர்கால இருப்பு மாணவர்களாகிய உங்களின் கல்வியிலேயே தங்கியிருப்பதாகவும், முன்பு கல்வி தனிப்பட்ட ஒருவருடைய தேவையாக இருந்ததாகவும்,இன்று கல்வி இனத்தின் தேவையாக மாறி விட்டதாகவும் குறிப்பிட்டார். மாணவர்கள் கல்வியுடன் சிறந்த பழக்க வழக்கங்களை கற்க வேண்டும் எனவும் , இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் பங்கெடுக்க வேண்டுமெனவும் மாணவர்களையும் பெற்றோர்களையும் வலியுறுத்தினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த முன்பள்ளி புளொட் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ பாலசந்திரன் அவர்களினால் நிறுவப்பட்டது எனவும் முன்பள்ளியின் ஆசிரியருக்கு மாதாந்த சம்பளத்தை தமிழீழ மக்கள் விடுதலைக்கழக (புளொட்) சமூக ஆர்வலர் திரு.த.நாகராஜா (லண்டன்) அவர்கள் வழங்கி வருகின்றார் எனவும் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களையும் அவரே வழங்கிவைத்தார் எனவும் குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் முன்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், சித்தாலேப்ப நிறுவனம் மற்றும் கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தால் நடாத்தப்பட்ட சித்திர போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதள்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக