(ஆதி) வவுனியா நகரத்தில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென வெடித்தது.
இன்று மாலை 3.30 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றது. வவுனியா நகரில் உள்ள பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பிய பெல்லி ரக மோட்டர் சைக்கிள்
வெடித்து தீப் பற்றியது. இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ் விபத்தில் மோட்டர் சைக்கிள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் அதன் சாரதியும் பெற்றோல் நிரப்பிய ஊழியரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக