தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை அடுத்து ஆலோசனைக்கு அமையவே தாமும் தாயாரும் வெளிநாடு சென்றதாக மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு வெளியிட்ட பின்னரே தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து மைத்திரிபால மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோரின் அறிவுரைக்கு இணங்கவே வெளிநாடு சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கடந்த வார இறுதியில் நாடு திரும்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் உயிர் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது தற்போது
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக