திங்கள், 15 டிசம்பர், 2014

பவானி பசுபதிராசா வவுனியாவுக்கு திடீர் இடமாற்றம்..!!

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி பவானி பசுபதிராசாவுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சினால் வழமைபோல வழங்கப்படும் இடமாற்றமே இது என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி அவர் வவுனியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

பவானி பசுபதிராசாவின் இடத்திற்கு அங்கு பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த பவானந்தராஜா, நியமிக்கப்படவுள்ளார்.


பணிப்பாளர் பவானி பசுபதிராசாவை இடமாற்றக்கோரி பல தடவைகளில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக