போரின் மூலம் செய்து கொள்ள முடியாதவற்றை புலம் பெயர் புலிகள் தேர்தல் மூலம் செய்து கௌர்ள முயற்சிப்பதாக சீனி அமைச்சர் லக்ஸ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா, மைத்திரிபால, ரணில் போன்றவர்கள் ஐரோப்பிய புலிகளின் பணத்தைப் பெற்றுக்கொண்டு மீண்டும் நாட்டை காட்டிக்கொடுக்க முயற்சிக்கின்றனர்.
நாட்டை நேசிக்கும் எவரும் இதற்கு ஏமாந்துவிடக்கூடாது.
இந்த மூன்று பேரின் துரோகச் செயலுக்கு மங்கள சமரவீரவும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்.
நாட்டை பாதுகாத்து நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுத்த தலைவருடனேயே மக்கள் இருக்கின்றார்கள்.
போரின் மூலம் செய்துகொள்ள முடியாதவற்றை இந்த மூன்று பேரையும் கொண்டு புலம்பெயர் புலிகள் தேர்தல் ஊடாக செய்து கொள்ள முயற்சிக்கின்றனர்.
இதனை புரிந்து கொண்ட திஸ்ஸ அத்தநாயக்க நாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார்.
எதிர்வரும் நாட்களில் மேலும் பலர் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்வார்கள்.
நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஆளுமை உடைய ஒரே தலைவர் மஹிந்த ராஜபக்ச மட்டுமே என லக்ஸ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
மஹியங்கனை தம்பான வேவத்த பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக