ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்திய அனைத்து வேட்பாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியர் தம்மை இன்று சந்திக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
வேட்பாளர்களும் தேர்தல் ஆணையாளரும் சந்திக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
வேட்பு மனுத் தாக்கல் செய்வது முதல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் தினம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையாளர் விளக்கமளிக்க உள்ளார்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் அறிவிப்பார்.
தேர்தல் கண்காணிப்பாளர்களின் பங்களிப்பு, வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு போன்றன குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.
வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பின்பற்ற வேண்டிய கட்டாய சட்ட விதிகள் பற்றியும் தேர்தல் ஆணையாளர் விளக்கம் அளிப்பார் என தேர்தல் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, கட்சியை விட்டு விலகியதனைத் தொடர்ந்து முதல் தடவையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நேரடியாக இன்று சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக