வெள்ளி, 5 டிசம்பர், 2014

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 135ம் ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!! (படங்கள் இணைப்பு)

வவுனியா கலை,இலக்கிய நண்பர்கள் வட்டம் ,வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் இணைந்து நடத்திய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 135ம் ஆண்டு நினைவு தினம் வவுனியா இலுபையடியில் அமைந்துள்ள நாவலர் பெருமான் சிலையடியில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் இடம் பெற்றது .

இந்த நிகழ்வில் வடமாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைபின் உறுப்பினரும் ,முன்னாள் வவுனியா நகர பிதாவுமான   திரு G T லிங்கநாதன் ,முன்னாள் உப நகர பிதா திரு சந்திரகுலசிங்கம் (மோகன் ),வவுனியா
நகரசபை செயலாளர் திரு க.சத்தியசீலன் ,கலாசார உத்தியோகத்தர் திரு இ.நித்தியானந்தன் ,இன்தமிழ் இனியன் திரு எஸ் எஸ் வாசன் ,,வவுனியா C C T M S பாடசாலையின் அதிபர் திரு பஸ்தியாம்பிள்ளை ,தமிழ் ஆசிரியர் திருகதிர்காமசேகரன், முன்னாள் அதிபர் திரு .வையாபுரிநாதன்,முன்னாள் கோவில்குளம் இந்து கல்லூரி அதிபர் திரு சிவஞானம் ,இலங்கை வங்கி முகாமையாளர் ரோய் ஜெயக்குமார், வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ),கலைஞர் மாணிக்கம் ஜெகன் ,வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு ப.சத்தியசீலன் ,பிரதேசபை உறுப்பினர் சிவம் ,வர்த்தகர் நந்தன் ,சமுக ஆர்வலர்கள் பாலா, சேகர் ,இமயவன், வவுனியா C C T M S பாடசாலையின் உயர்தர மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் .
நிகழ்வில் உரையாற்றிய தமிழ் மணி அகளங்கன் அவர்கள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் பெருமைகளை பறை சாற்றினார் அவர் “எமது இந்து சமயத்துக்கு மட்டும் இன்றி கிறிஸ்தவ சமயத்துக்கும் பெரும் சேவை செய்துள்ளார் .
வெஸ்லியன் கல்லூரி தற்போது சென்றல் கல்லூரி அதிபராக இருந்த பாதிரியார் பீட்டர் பார்சிவல் கேட்டு கொண்டதுக்கு இணங்க பைபிளை மொழிபெயர்த்து கொடுத்த பெருமையும் ஆறுமுக நாவலரையே சாரும் .
மேலும் யாழ் வண்ணார் பண்ணையில் சைவபிரகாச வித்தியாலயம் தொடங்கி இலங்கை முழுவதும் சைவபிரகாச கல்லூரிகள் தொடங்க அடித்தளமிட்ட பெருமை இவரையே சாரும் எனவும் .ஆங்கில அறிவின் அவசியத்தை அறிந்து ஆங்கில பாடசாலைகளை திறந்த பெருமை இவரையே சாரும் என்றார்.மேலும் யாழ் மக்கள் சிறந்த கல்விமான்களாக திகழ இவரின் பங்கு அளப்பரியது” என உரையாற்றினார் .
பின்னர் உரையாற்றிய வடமாகாணசபையின் உறுப்பினர் திரு G T லிங்கநாதன் ,அவர்கள் “1996 இல் தான் வவுனியா நகர சபையின் தலைவராக இருந்த காலத்தில் தொலைகாட்சியில் வவுனியா சம்மந்தமான நிகழ்வு ஒன்றை காட்டும் போது ராணுவ கமாண்டர் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் சிலையை காட்டி நிகழ்வை காட்டியதாகவும் அந்த கணத்தில் இரவோடு இரவாக ஜோசித்து வந்த யோசனையின் பிரகாரம் வந்ததே இந்த தமிழ் பெரியார் சிலைகளை நிறுவுதல் என்ற திட்டம்..
அதற்கு தனக்கு ஒத்துழைத்த புளொட்டின் முன்னாள் ராணுவ தளபதி மாணிகதாசனுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டதுடன் மேலும் தன்னோடு ஒத்துழைத்த முன்னாள் உப நகர பிதா சந்திரகுலசிங்கம் (மோகன் ) அப்போது எதிர்கட்சி உறுப்பினராக இருந்த பெனடிக் , ஆரிப் மற்றைய உறுப்பினர்கள் ,நகரசபை ஊழியர்களுக்கும் நன்றியை” தெரிவித்து கொண்டார்.
தமிழ் பெரியார் சிலைகளை நிறுவி 17 வருடங்களுக்கு பின் நானே திறந்து வைத்த ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 135ம் வருட நினைவு நிகழ்வில் முதன் முதலாக கலந்து கொள்வது மகிழ்ச்சி எனவும் ஏற்பாட்டாளர்களான சந்திரகுமார் (கண்ணன் ), மாணிக்கம் ஜெகன் ஆகியோருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்து கொண்டார் .
பின்னர் உரையாற்றிய கதிர்காமசேகரன் ஆசிரியர் அவர்கள் 19ம் நூற்றாண்டில் தமிழ் ,இலக்கிய வரலாற்றில் முதல் பாதி யாழ் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரினதும் ,மிகுதி யாழ் சிறுபிட்டி சி.வை தாமோதரம்பிள்ளை குறியது எனவும் உலகத்தார் போற்றும் அளவுக்கு வாழ்ந்த பெருமகன் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர் பெருமைகளை நயம்பட உரைத்தார்
இறுதியில் சந்திரகுமார் (கண்ணன்) தனது நன்றி உரையில் “இந்த விழாவுக்கு பூமாலைகளை வாங்கி தந்த வாணி கூலர் உரிமையாளர் நந்தன் அவர்களுக்கும், சிற்றுண்டி ,தேநீர் வழங்கிய கிருஸ்னபவன் உரிமையாளர் சுதா அண்ணா அவர்களுக்கும் தன்னோடு சிரமதானம் செய்து சிலை அடியை துப்பரவாக்கி கழுவ உதவி புரிந்த மாணிக்கம் ஜெகன் அவர்களுக்கும் ,கலந்து கொண்டவர்களுக்கும் .குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கும்” தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக