இலங்கைக்கு சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் வந்து செல்கின்றமை அச்சுறுத்தல் நிலையை ஏற்படுத்தவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.
சீனாவின் நீர்மூழ்கிக்கப்பல் ஆபிரிக்காவில் இருந்து திரும்பும் போதே இலங்கைக்கு வந்துள்ளது.
எனவே அது அச்சநிலைக்கான காரணத்தை உண்டாக்கவில்லை என்று அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் பங்கேற்றுள்ள அவர், செய்தியாளர்களிடம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உதவியுடன் பாரிய எரிபொருள் குதம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இலங்கையில் மரண தண்டனை பெற்று ஐந்து தமிழக மீனவர்களின் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பல வருடகாலமாக மரணதண்டனை நிறைவேற்றப்படுவதில்லை.
எனவே மரணதண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஐந்து மீனவர்களின் பிரச்சினையை இரண்டு நாடுகளும் உரிய வகையில் தீர்த்துக்கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக