வியாழன், 13 நவம்பர், 2014

உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபையில் சமர்ப்பிக்கப்படமை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது ஜே.வி.பி..!!

உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறின. எனினும் இதுவரை அதனை ஆளும் தரப்பு மேற்கொள்ளவில்லை. இது  பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ஷவுக்கு மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட முடியும் எனவும் இரண்டாம் தவணை பதவிக்காலத்தின் 4 ஆண்டு நிறைவின் பின் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் எனவும் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்மானத்தை சபை முதல்வர் நாடாளுமன்றத்தில் அறிவித்த போதும் அதனை சபையில் சமர்பிக்கவில்லை.

உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் பற்றிய ஆவணம் ஒன்றை நேற்று முன்தினம் சபை முதல்வரான அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் வாசித்தார்.

10 அடங்கிய உயர்நீதிமன்றத்தின் நீதியரசர்கள் குழு ஏகமனதாக இந்த கருத்தை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறின. எனினும் இதுவரை அதனை ஆளும் தரப்பு மேற்கொள்ளவில்லை.

10 நீதியரசர்களும் ஏகமானதாக இந்த கருத்தை வெளியிட்டிருப்பார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்துறையில் பேசப்பட்டு வருகிறது.

அத்துடன் உயர்நீதிமன்றத்தின் கருத்து எதுவாக இருந்தாலும் எந்த விடயம் சம்பந்தமான தீர்ப்பாக இருந்தாலும் நீதிமன்றத்திற்கு கௌவரமனித்து அதனை விமர்சிக்கும் முழுமையான உரிமை குடிமக்களுக்கு உள்ளது என சட்டவாதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அதேவேளை ஜே.வி.பி நேற்று தனது தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஏற்க முடியாது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக