இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சின்ஹா சிறுபான்மை கட்சித் தலைவர்களை சந்தித்து விசேட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை இவ்வாறு சந்தித்துள்ளார்.
கடந்த 8ம் திகதி இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம் மற்றும் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அவசர அழைப்பு விடுத்து இந்த சந்திப்பை நடத்தியதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறுபான்மை கட்சிகளின் தலைவர்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகருக்கு இடையிலான சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு மேல் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், என்ன விடயங்கள் பற்றி இந்த சந்திப்பில் பேசப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ உத்தியோகபூர்வமாக எந்தவிதமான அறிக்கைகளையோ தகவல்களையோ வெளியிடவில்லை.
எனவே, இந்த சந்திப்பின் போது இரகசியமான விடயங்கள் பற்றி பேசப்பட்டிருக்கலாம் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் சிறுபான்மை மக்களின் அதிகாரப் பகிர்வு, சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக