வியாழன், 13 நவம்பர், 2014

மத்தள விமான நிலையத்தில் வரவுக்கு மீறிய செலவு..!!!

மத்தள மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்ட நாளில் இருந்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை விமான நிலையத்தை நடத்தி செல்வதற்காக 2 ஆயிரத்து 756 மில்லியன் ரூபா செலவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த ஆண்டு செப்டம்பர் வரை மத்தள விமான நிலையத்தின் மொத்த வருமானம் 143.79 மில்லியனாகும்.

ஆனால் மொத்த செலவு 2 ஆயிரத்து 900 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை விமான நிலையத்தின் மொத்த வருமானம் 48.1 மில்லியன் ரூபா. எனினும் இந்த காலப்பகுதியில் செலவு மாத்திரம் ஆயிரத்து 403.65 ரூபா. 2013 ஆம் ஆண்டில் மத்தள விமான நிலையத்திற்கு 760 விமானங்கள் வந்து சென்றன.



2014 ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஆயிரத்து 28 விமானங்கள் வந்து சென்றுள்ளன. இதனை தவிர மத்தள விமான நிலையத்தில் 2013 ஆம் ஆண்டு 565 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர்.

தற்போது 600 பேர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக