செவ்வாய், 11 நவம்பர், 2014

மூன்றாவது தடவையாக தேர்தலில் போட்டியிட மஹிந்தவிற்கு எவ்விதத் தடையுமில்லை..!!

மூன்றாம் தவணைப் பதவிக் காலத்திற்காக ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச போட்டியிடுவதில் எவ்விதத் தடையும் இல்லை என உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
எந்தவொரு நேரத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலுக்காக அழைப்பு விடுக்க முடியும்.

கனம் சபாநாயகர் அவர்களே!

எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக போட்டியிட்டு தேர்தலில் வெற்றியீட்ட சட்ட ரீதியாக எந்தப் பிரச்சினையும் கிடையாது.

இதனை உச்ச நீதிமன்றம் ஏகமனதாக தீர்மானித்து அறிவித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கும், ஜனாதிபதி தேர்தலுக்காக அழைப்பு விடுப்பதற்கும் அரசியல் அமைப்பு அடிப்படையில் எவ்வித தடையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.



எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வெற்றியீட்டுவார் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்ட விளக்கம் குறித்த அறிவிப்பினை அவைத் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா வெளியிட்ட போது எதிர்க்கட்சிகள் கோசம் எழுப்பி குழப்பம் விளைவித்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக