புதன், 12 நவம்பர், 2014

பின்லேடனைக் கொன்றது யார் அமெரிக்காவில் தொடர்கின்றது சண்டை..!!

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டமை நன்கு திட்டமிடப்பட்ட, அமெரிக்காவின் மீதான ஆச்சரியத்தை உயர்த்திய ஒரு நடவடிக்கை.
உலகினை நடுங்க வைத்திருந்த அல் கெய்தா கட்டமைப்பின் தலைமையின் பலவீனத்தை வெளிப்படுத்திய ஒரு தாக்குதலாகவும் அது இருந்தது.

இவ்வாறு தற்போது ஏற்பட்டிருக்கும் பின்லேடனைச் சுட்டது யார் என்ற சர்ச்சை பற்றி ஆய்வாளர் சுரேஸ் தர்மா, லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் கலந்து கொண்டு தெரிவித்தார்.

2001ல் அமெரிக்காவில் இடம்பெற்ற தாக்குதல்களில் அமெரிக்காவில் 3,000 பேர் கொல்லப்பட்டத்திற்கான சூத்திரதாரியான ஓசாமா பின்லேடனைத் தேடி, அமெரிக்கா மேற்கொண்ட 10 வருட தேடுதல் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் பின்லேடனின் சாவோடு முடிவுற்றது.

அமெரிக்கப் படைகளிற்கு ஒரு எழுதப்பட்ட விதி இருக்கிறது. அதாவாது நாட்டின் பேரில் தாங்கள் பங்கேற்கும் தாக்குதல்கள் பற்றிய எந்த இரகசியங்களையும் கசிய விடக்கூடாது.



ஆனால் இப்போது இத்தாக்குதலில் பங்குபற்றிய பலரும் அதை மீறி உண்மைகளைக் கதைக்கிறார்கள் என்பது உள்ளிட்ட பல தகவல்களை இந்த நிகழ்வில் அவர் பகிர்ந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக