செவ்வாய், 11 நவம்பர், 2014

இலங்கை அரசியலில் நிகழவுள்ள பல்வேறு மாற்றங்கள்..!!

இலங்கை அரசியலில் அடுத்த இரண்டு வார காலப் பகுதிக்குள் பல்வேறு மாற்றங்கள் இடம்பெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வமான அறிவிப்பு விடுக்கப்படாத நிலையில், கட்சி தாவல்கள், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர், ஜாதிக ஹெல உறுமயவின் அறிவிப்பு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலான அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அக்கட்சியிலிருந்து விலகி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு இணைந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் கசிந்திருந்தன.

சிங்கப்பூருக்கு சென்றிருக்கின்ற அவர், ஞாயிற்றுக்கிழமை நாடுதிரும்பி, நேற்று திங்கட்கிழமை அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார் என்று பரவலாக பேசப்பட்டபோதும் மங்கள சமரவீர எதிர்வரும் வியாழக்கிழமை (13) நாடுதிரும்ப விருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.



இந்நிலையில், நேற்று நடைபெற்ற பொது எதிரணியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, சிகிச்சைகளுக்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளாதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக