உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் கோரும் நடவடிக்கை இரகசியமாக நடத்தப்பட்டமை வருத்தமளிக்கின்றது என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சட்ட விளக்கம் கோரல் தொடர்பில் கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைக்க சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி அஜித் பத்திரண தெரிவித்துள்ளார்.
மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுதல் மற்றும் இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துதல் ஆகிய இரண்டு காரணிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை கோரியிருந்தார்.
ஜனாதிபதியின் இந்த சட்ட விளக்க கோரிக்கை தேசிய ரீதியில் முக்கியத்துவமானது.
தனிப்பட்ட ரீதியில் இந்த விளக்கத்தை அளிப்பது நியாயமானதல்ல.
பகிரங்கமான முறையில் இது தொடர்பில் வாதப் பிரதிவாதங்களைச் செய்ய அனுமதிக்குமாறும், விளக்கம் அளிக்க கால அவகாசம் வழங்குமாறும் கோரப்பட்டிருந்தது.
சட்ட விளக்கம் கோரிய நீதியரசர்களே இது தொடர்பில் எதிர்காலத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரணை செய்ய உள்ளனர்.
இது நியாயமற்ற ஓர் செயற்பாடாகும். ஏனெனில், ஏற்கனவே ஓர் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய நீதியரசர்களிடம் மாறுபட்ட ஓர் விடயம் பற்றி வாதமொன்றை முன்வைத்து நியாயம் பெற்றுக்கொள்வது எந்தளவிற்கு நடைமுறைச் சாத்தியமாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பகிரங்கமாக வாதம் நடத்தி அதன் பின்னர் சட்ட விளக்கம் அளித்திருக்க வேண்டுமென என அஜித் பத்திரண தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் தொடர்பில் கருத்து வெளியிடும் நோக்கில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக