புதன், 12 நவம்பர், 2014

இலங்கையில் தற்போதைய முன்னெடுப்புக்கள், ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானவை கருத்து..!!

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் ஜனநாயகத்துக்கான போராட்டம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது. இது மிகவும் ஆரோக்கியமான விடயம் என்று ஆங்கில இணையம் ஒன்று கட்டுரை தீட்டியுள்ளது.
இதுவரைகாலமும் அமைதியாக இருந்த மக்கள் தற்போது விழித்துக் கொண்டிருப்பதை ஊவா தேர்தல் உணர்த்தியது.

அங்கு அரசாங்கத்தினால் நிவாரணங்கள் வழங்கப்பட்ட போதும் மக்கள் அவற்றை புறந்தள்ளிவிட்டு அரசாங்கத்துக்கு எதிராக வாக்குகளை பயன்படுத்தினர்.

அதேபோன்றே 2015 வரவுசெலவுத் திட்டத்திலும் அரசாங்கம் அரச பணியாளர்களை கவரும் வண்ணம் பல வெகுமதிகளை கொடுத்துள்ளது.

எனினும் தற்போது நாட்டில் ஜனநாயகத்துக்கான தேவை ஒன்று இருப்பதையே மக்கள் முன்னிலைப்படுத்துகின்றனர்.

இதனைக் கருத்திற்கொண்டே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட தலைப்பட்டுள்ளன.



அதிலும் சிவில் குழுக்கள், தனியார் போக்குவரத்துத்துறையினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என்று பல்வேறு தரப்பினரும் இதில் இணைந்துள்ளமை ஆரோக்கியமான விடயமாக கருதப்படுகிறது.

1978ம் ஆண்டு இயற்றப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைக்கு 18வது அரசியலமைப்பு திருத்தம் மூலம் அபரிதமித அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக இன்று நாட்டில் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற்கொண்டு மாதுலுவாவே சோபித தேரர் மற்றும் அத்துரலியே ரத்தன தேரர் ஆகியோர் முன்கொண்டு வந்துள்ள கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.

எனவே இந்த முன்னெடுப்பு சிறப்பாக கொண்டு செல்லப்படுமானால் நாட்டில் உண்மை ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும் என்று இணையத்தளம் கருத்துரைத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக