புதன், 12 நவம்பர், 2014

வடக்கு மீனவர்களை அரசாங்கம் உதாசீனம் செய்கிறது சிவசக்தி ஆனந்தன்..!!

வடக்கு மீனவர்களை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மீன்பிடித்துறை அமைச்சுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.

வடக்கு மீனவர்களுக்காக இந்த அரசாங்கம் எந்தவொரு நிவாரணத்தையும் வழங்கவில்லை.

வடக்கு மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை முன்னெடுக்கின்றனர்.

போர் காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவிகள் செய்யப்பட வேண்டும்.

அரசாங்கம் நிவாரணங்களை வழங்க வேண்டியது அவசியமானது.

வடக்கு கிழக்கு மீனவர்களுக்காக புதிய மீன்பிடித் துறைமுகமொன்று தேவைப்படுகின்றது.

எரிபொருள் நிவாரணங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும்.


மீன்பிடிக்கு தேவையான உபகரண விநியோகமும் கிரமமான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டுமென சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக