தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று துப்பாக்கியால் முன்னெடுத்த போராட்டத்தை தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு விதமாக முன்னெடுத்து வருவதாக ஆளும் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்படுகிறது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய சூழலில் நாடு எதிர்நோக்கும் சவால் என்ற தலைப்பில் ஊடகத்துறை அமைச்சில் இன்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
30 வருடகால போரை முடிவுக்கு கொண்டு வந்த பின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி இட்டுச் செல்கிறார்.
இப்படியான நிலைமையில், புலம்பெயர் தமிழர்கள் மீ்ண்டும் பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றனர் எனவும் துமிந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக