புதன், 12 நவம்பர், 2014

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை சந்திரிக்கா சந்திரிக்காவுக்கு தடைபோட்ட உயர்நீதிமன்றம்..!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொழும்பில் உள்ள சில வெளிநாட்டு தூதரங்களுக்கு அறிவித்துள்ளதாக நம்பத்தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் பொது வேட்பாளருக்கும் பொது வேலைத்திட்டத்திற்கும் தான் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அவர் தூதரகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இந்தியத் தூதுவருடன் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தவுக்கு முடியும் சந்திரிக்காவுக்கு முடியாது: சந்திரிக்காவுக்கு தடைபோட்ட உயர்நீதிமன்றம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என உயர்நீதிமன்றம் அலரி மாளிகைக்கு நேற்று அனுப்பிய தீர்மானத்தில் ஓய்வுபெற்ற ஜனாதிபதி ஒருவர் 18வது திருத்தச் சட்டத்தின் கீழ் போட்டியிட முடியாது எனக்கூறப்பட்டுள்ளது.


இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் தீர்மானம் என கூறப்படுவதுடன், அது இன்னும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 2010 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் அதே வருடம் நவம்பர் 18 ஆம் திகதியே ஜனாதிபதியோக சத்தியப் பிரமாணம் செய்தார்.

18வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமுலுக்கு வந்ததால், இந்த திருத்தச் சட்டத்தின் கீழ் பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவருக்கு மாத்திரமே போட்டியிட முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க போட்டியிட்டால் அவர் போட்டியிடுவதை தடுக்கும் நோக்கில் உயர்நீதிமன்றத்தின் இந்த முடிவு இன்னும் பகிரங்கப்படுத்தப்படாமல் இருப்பதாக பேசப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக