ஞாயிறு, 9 நவம்பர், 2014

மட்டக்களப்பில் இன நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையிலான செயலமர்வு அமெரிக்க தூதுவர் பங்கேற்பு..!!(படங்கள் இணைப்பு)

தேசிய சமாதானத்தினையும் இனங்களிடையே நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்தும் வகையிலான விசேட செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
தேசிய சமாதான செயலகத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு இன்று சனிக்கிழமை காலை தேசிய சமாதான செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கலாநிதி ரி.ஜயசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த செயலமர்வில் தேசிய சமாதான செயலகத்தின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா,கிழக்கு மாகாண இணைப்பாளர் தயாபரன், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிக்சல் ஜெ.சிசன் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மூன்று இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், மும்மதங்களின் மதத்தலைவர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது சமூகங்களிடையே சகவாழ்வினையும் நல்லிணக்கத்தினையும் கட்டியெழுப்பும் வகையிலான கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இலங்கை அரசாங்கத்தின் கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகளினை நடைமுறைப்படுத்துவதன் மூலம் சமாதானத்தினை கட்டியெழுப்புவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மதங்களிடையே ஏற்படும் கசப்புணர்வுகளை இல்லாமல் செய்து ஒன்றுபட்ட மக்களாக வாழ்வதற்கான சமூக மாற்றம் குறித்தான கருத்துகளும் இங்கு பரிமாறப்பட்டன.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக