வடக்கு வாழ் பெண்கள் இன்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருவதாக நாடாளுமன்ற விவகார அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்கள் இன்று விவசாய பூமிகளாக மாற்றமடைந்துள்ளன.
குறித்த பிரதேசங்களில் தாய், சேய் மரண எண்ணிக்கைப் போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பிரதேச பெண்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
நிலக்கண்ணி வெடிகள் பற்றிய அச்சம் கிடையாது. பிள்ளைகள் அச்சமின்றி பாடசாலைக்கு செல்லக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஊடாக தலா ஐம்பது லட்ச ரூபாவினை வழங்கி வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டால் இதனை விடவும் அதிகளவு பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் நேற்று இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக