யாழ்ப்பாணம் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் அமைந்திருக்கும் நூலகத்திற்கு நேற்று முன்தினம் (30.10.2014) ஒருதொகுதி புத்தங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
புளொட் தலைவரும், முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் மேற்படி ஒரு தொகுதி புத்தகங்களை இந்நிகழ்வின்போது பாடசாலை நிர்வாகத்தினரிடம் கையளித்துள்ளார்.
இந்நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரிய, ஆசிரியர்களும் பெருமளவில் பாடசாலைப் பிள்ளைகளும் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக