ஞாயிறு, 2 நவம்பர், 2014

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்குள் இணைக்க முயற்சி..!!

மூன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சிக்குள் இணைக்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியில் இணைத்து கொள்ளும் நடவடிக்கையில், அனுபவமுள்ள ஒரு சிரேஸ்ட ஆளும் கட்சி உறுப்பினரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தெற்கு, கண்டி மற்றும் குருணாகல் பிரதேசங்களை பிரதிநிதித்துவம் செய்யும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆளும் கட்சியில் இணைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.

கடந்த பத்து நாட்களாக இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வரவு செலவுத் திட்ட விவாதங்களுக்கு முன்னதாக இவர்களை ஆளும் கட்சி வரிசையில் அமரச் செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


இதேவேளை, ஆளும் கட்சியினர் சிலர் எதிர்க்கட்சிகளில் இணைந்துகொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக