ஞாயிறு, 9 நவம்பர், 2014

நாடாளுமன்ற அமர்வின் போது நித்திரை கொள்ளும் உறுப்பினர்களுக்கு அறிவுரை..!!!

நாடாளுமன்ற அமர்வுகளின் பொது நித்திரை செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நித்திரை கொள்ள வேண்டாம் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2015ஆம் ஆண்டின் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்த போது அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நித்திரை கொண்டமை தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா இன்று நாடாளுமன்றத்தில் செய்தித்தாள் ஒன்றின் புகைப்படம் ஒன்றை காண்பித்து இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதன்போது கருத்துரைத்த உள்துறை அமைச்சர் ஜோன் செனவிரட்ன, ஒருவரை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை முன்வைப்பது கூடாது என்று கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட அஜித் பி பெரேரா, பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய அமர்வுகளின் போது நித்திரை செய்வதாக குறிப்பிட்டார்.



இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் நித்திரை செய்வதற்கு இது சிறந்த உதாரணமாகும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக