ஞாயிறு, 2 நவம்பர், 2014

கடற்படை வாகனம் வீதியைவிட்டு விலகி விபத்து 14 பேர் காயம்..!!

கடற்படையினரின் வாகனம் ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று பிற்பகல் களுத்துறை மாவட்டத்தில் மீகஹகிவுள, லிஹிணியாகம என்ற இடத்தில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

கடற்படையினரை ஏற்றிக் கொண்டு அதிவேகத்தில் பயணித்த வாகனமொன்றே சாரதியின் கட்டுப்பாட் டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது வீதிக்கு அருகில் இருந்த வீடு ஒன்றின் மீதும் கடற்படை வாகனம் மோதியதன் காரணமாக, வீடு சேதமடைந்துள்ளது.

காயமடைந்த கடற்படையினரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மீகஹகிவுள பொலிசார் ,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக