மண்சரிவு இடம்பெற்ற கொஸ்லந்த, மீரியபெத்த பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட மீட்பு பணிகளின் போது மேலும் மூன்று சடலங்கள் கிடைக்கப் பெற்றதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத்லால் குமார தெரிவித்தார்.
இதன்போது பெண் ஒருவரினதும் சிறுமி ஒருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான மத்திய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்தார்.
மற்றைய சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் டி. என். ஏ. சோதனைகளுக்காக அனுப்பி வைப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது.
கொஸ்லந்த மீரியபெத்த பகுதியில் மீட்பு பணிகளை இடை நிறுத்தியுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் மீண்டும் அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், மீட்புப் பணிகளை கைவிடுவது தொடர்பில் இதுவரையில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லையென அரசாங்க அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிய வருகிறது.
மீட்பு பணிகளைக் கைவிடுவது இன்னும் பேச்சு மட்டத்திலேயே இருப்பதனாலும் உத்தியோகபூர்வ அறிவிப்பு கிடைக்கும் வரை எதனையும் திட்டவட்டமாகக் கூற முடியாது என்றும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர கடந்த சனிக்கிழமை மீரியபெத்த பகுதிக்கு விஜயம் செய்த போது, மீட்பு பணிகளை நிறுத்துமாறு பிரதேசவாசிகள் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை நிறுத்த நேற்று ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே மீண்டும் இராணுவ அதிகாரிகள் மீட்பு பணிகளை ஆரம்பித்திருந்தனர்.
தற்போது மீட்கும் சடலங்கள் மிகவும் உருக்குலைந்த நிலையில் இருப்பதனாலும் சடலங்களின் பாகங்கள் கண்டெடுக்கப்படுவதனாலும் உறவினர்கள் பாரிய உளத்தாக்கத்திற்கு உள்ளாவதாக அமைச்சரிடம் கூறியிருந்தனர்.
உறவினர்கள் கேட்டுக்கொள்வார்களாயின் ஜனாதிபதி அவர்களுடன் இது குறித்து பேச்சு நடத்தி விரைவில் தீர்மானமொன்று முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக