சனி, 1 நவம்பர், 2014

வவுனியாவில் நிவாரண பொருட்கள் சேகரிப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.!!(படங்கள் இணைப்பு)

(ஓவியன்) வவுனியா  மாவட்ட வர்த்தகர்களுடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று(01/11) வவுனியா நகரமெங்கும்  பதுளை உறவுகளுக்கான நிவாரண பொருட்கள் சேகரிப்பில் ஈடுபட்டனர். . வவுனியாவின் நகர பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ  கட்சிகளின் முக்கியஸ்தர்களின் ஒன்றிணைவில் வர்த்தக சங்கத்தினருடன் பொதுமக்களும் இணைந்து நிவாரண பொருட்களை சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


இன்றையதினம்(01/11) மாலை வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்திச்சங்கத்தினர் நிவாரணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக