பதுளையில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற இயற்கையின் கோர தாண்டவத்தில் அல்லலுறும் எமது உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டிடுவோம்.
இன்று
மண்சரிவால் ஒரே நாளில் நடுத்தெருவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள எமது உறவுகளான
தமிழ் மக்களுக்கு உதவ வேண்டியது ஒவ்வொரு தமிழர்களினதும் தலையாய
கடமையாகும்.
உலகெங்கும்
பரந்து வாழும் எம் மக்கள் மலையகத்தில் நிர்க்கதிக்கு உள்ளான உறவுகளுக்கு
உதவ விரும்பி நேரடியாக உதவ முடியாது போனால், உடன் தொடர்பு கொள்ளுங்கள்.
உங்களது உதவிகளை அந்த மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான உதவிகளை நாம்
செய்து தருவோம்.
உறவுகள், உடமைகளை இழந்து தவிக்கும் எமது தமிழ் மக்களுக்கு உடனடியாக உதவ வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
"அதிரடி"
இணையத்தளம், மற்றும் பிரித்தானியாவின் "வெற்றி"
வானொலி, "பூர்வீகம்" செய்திகள் ஆகியவற்றின் ஆதரவுடன் "வவுனியா கோவில்குளம்
இளைஞர் கழகத்தினரால்" எமது உறவுகளுக்கான நிவாரண பொருட்கள்
சேகரிக்கப்படுகின்றன. நல்லுள்ளம் படைத்த எமது உறவுகள் உதவிட
கழகத்தினருடன் தொடர்பு கொள்ளவும்.
நேரடியாக பொருட்களை எமது அலுவலகத்தில் ஒப்படைக்க முடியும். எமது அலுவலக முகவரி...
வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்
இலக்கம் 56, 5 ஆம் ஒழுங்கை,
கோவில்குளம், வவுனியா.
மேலதிக தகவல்களுக்கு-
"வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தினருடன்" தொடர்பு கொள்ள முடியும்....
0757729544 (திரு.காண்டீபன்)
0766644059 (திரு.நிவேதன்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக