சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே 46 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 20 புதிய ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமானது.
தலைநகர் பீஜிங்கில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், இன்று சீன அதிபர் ஜிங்பிங் மற்றும் பிரதமர் லி கெகியாங் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
பாகிஸ்தானின் காயிதே ஆஸம் சூரிய ஒளி பூங்காவில் சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தல், சீனா-பாகிஸ்தான் இடையே தரைவழியே ‘ஆப்ட்டிக்கல் பைபர் கேபிள்’ பதித்தல், பாகிஸ்தானின் தார் பகுதியில் 65 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை தோண்டி எடுத்தல், 870 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நோக்கில் சுக்கி கினாரி புனல் மின் நிலையத்தை மேம்படுத்துதல்,
1320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சஹிவால் அனல் மின் நிலையத்தை நிறுவுதல், ஜிம்பிர் பகுதியில் காற்றாலைகளின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையத்தை நிறுவுதல், பைசலாபாத் பகுதியில் தொழிற்பூங்கா அமைத்தல் உள்ளிட்ட 20 புதிய ஒப்பந்தங்களில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், சீனப் பிரதமர் லி கெகியாங் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இன்று கையொப்பமான சுமார் 46 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான 20 புதிய ஒப்பந்தங்களில் பாகிஸ்தானின் மின்சார தேவையை நிறைவு செய்வதற்காக மட்டும் 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீன அதிபர் ஜிங்பிங், ‘பாகிஸ்தானும் சீனாவும் இரும்பு நண்பர்கள்’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
மிகவும் பலம் வாய்ந்த-நம்பிக்கைக்குரிய நட்பு நாடுகளை மட்டுமே ‘இரும்பு நண்பர்கள்’ என்று சீனத் தலைவர்கள் புகழ்வது உண்டு என்பது, குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக